உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

ராஜபாளையம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதி கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடைபெற்றது.  ராஜபாளையம் சர்வசமுத்ர அக்ரகாரத்தில் அமைந்துள்ள அபயஹஸ்த வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீரால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அனுமன் நாம பஜனை பாட 3 ஆயிரம் வடைமாலையுடன் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

* ஆதி விடும் விநாயகர் கோயிலில் பால் அபிஷேகத்துடன் தயிர், தேன், பன்னீர், முப்பழம், மஞ்சள், திரவியம், கரும்புச்சாறு அபிஷேகம் நடந்தது. சந்தனக்காப்பு பூசப்பட்டு பக்தர்கள் நாம பஜனை பாட வெள்ளி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
* மடத்துப்பட்டி ராமலிங்க சுவாமி கோயில் சுவாமி அபிஷேகத்துடன் பலவகை பூக்கள் பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
* கோதண்டராமர் கோயிலில் அபிஷேகம், பஜனையுடன்  பூஜை நடந்தது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.  வேட்டை வெங்கடேஷ பெருமாள் கோயில் உள்ள அனுமன் அபிஷேகத்துடன் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.திரளான பக்தர்கள் ராம நாமத்துடன் பஜனை பாடி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !