தேவாரம் ஐயப்பன் கோயிலில் யாழி பூஜை
ADDED :3253 days ago
தேவாரம்: தேவாரம் ஐயப்பன் கோயில் 60வது சக்தி, யாழி பூஜை நடந்தது. தேவாரம் ஜமின்தார் தங்கப்பாண்டியன் தலைமை வகித்தார். தெய்வீக பேரவை தலைவர் நாகராஜன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் கதிரேசன், வர்த்தக பிரமுகர் மனோகரன் முன்னிலை வகித்தனர். கோயிலில் இருந்து அரங்கநாதர் கோயில் எதிரே அமைக்கப்பட்டுள்ள ஆசிரமத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். நாச்சிக்காளை தோப்பில் உள்ள வன்புலி வாகனன் அலங்கார ஊர்தியில் அழைத்து வரப்பட்டார். 7 கன்னிமார் நெய்கொப்பரை சுமந்து வந்து சிறப்பு பூஜைகள் துவக்கப்பட்டது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். ஏற்பாடுகளை குருநாதர் நாராயணன் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.