உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் நவீன வசதிகளுடன் தங்கும் கூடங்கள்: பக்தர்களுக்கு தயார்

பழநியில் நவீன வசதிகளுடன் தங்கும் கூடங்கள்: பக்தர்களுக்கு தயார்

பழநி: தைப்பூச பாதயாத்திரை காவடிக்குழு பக்தர்களுக்காக பழநி தெற்கு மற்றும் மேற்குகிரி வீதிகளில் ரூ.7கோடி செலவில் நவீன குளியல், கழிப்பறை வசதியுடன் தங்கும் கூடங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

தமிழகத்தின் முதன்மை ஆன்மிக தலமான பழநியில் ஞான தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுவினராக பாதயாத்திரையாக வருகின்றனர்.அவர்கள் கிரிவீதி நடைபாதைகள், ரோட்டோரங்களில் தங்கும்போது, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளின்றி சிரமப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு பழநி தெற்கு மற்றும் மேற்குகிரிவீதிகளில் ரூ.7கோடி செலவில் பக்தர்கள் தங்கும் 12 கட்டணம் இல்லா கூடங்கள் கட்டப்பட்டன. கடந்த 2016 மார்ச் மறைந்த முதல் ஜெயலலிதா மூலம் திறக்கப்பட்டது. இதில் குளியல் அறைகள், நவீன கழிப்பறைகள், தங்கும் வளாகத்தில் மின்விசிறிகள், விளக்குகள், மாற்றுத்தினாளிகள் வசதிக்கேற்ற "டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. தைப்பூச திருவிழா பிப்.,3 முதல் பிப்., 12 வரை நடைபெற உள்ளதால் இக்கூடங்கள் காவடிக்குழுவினர் பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்காக விரைவில் திறந்துவிடப்படஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !