பாழாகும் கோவில் தேர்கள் "உறக்கத்தில் அதிகாரிகள்
திருப்பூர்: ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் தேர்கள் எவ்வித பாதுகாப்பு இல்லாமல், வெயிலில் காய்ந்து, வீணாகி வருகிறது. திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில்களில், தேர்த்திருவிழா, வைகாசி மாதத்தில் நடக்கும். கோவில்களுக்கு, இரண்டு தேர்கள் உள்ளன. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த, நூற்றாண்டு பழமையான தேர்களாகும். தேர்த்திருவிழா முடிந்ததும், தேர்நிலையில் நிறுத்தி, "ஷெட் அமைக்கப்படும். கடந்த ஆண்டு முடிந்ததும், சிறிய தேரான விநாயர் தேருக்கு, "ஷெட் அமைக்காமல், வெயிலிலும், மழையிலு<ம் ஒரு ஆண்டாக காய்ந்து வருகிறது. இந்நிலையில், தேர்நிலையில், கற்கள் பதிக்கும் பணிக்காக, பெரிய தேர்கள் இரண்டும், எட்டு மாதத்துக்கு முன், இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், வெயிலும், மழையிலும் சுவாமிகளின் தேர்கள் பாதித்து வந்தன. இணைப்புகளில் விரிசல் ஏற்பட்டும், தேரில் உள்ள பொம்மைகள் உடைந்தும், மையப்பகுதி பலகைகளில் விரிசல் ஏற்பட்டு, பெரிதாகி வந்தது. அதோடு, மழை நீர் , சாக்கடை கழிவுகளால், இரும்பு சக்கரம் துருப்பிடித்ததோடு, கரையான் பிடித்தும் வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன், தேர் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னும், பாதுகாப்பு "ஷெட் அமைக்காமல், வெயிலில் காய்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், பழமையான இரு தேர்களும், தேர்த்திருவிழாவுக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும். @தர்கள் பராமரிப்பு விஷயத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள் காட்டும் அலட்சிய @பாக்கு, பக்தர்களிடம் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.