உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம் சுரத்குமார் ஜெயந்தி விழா கொண்டாட்டம்

யோகி ராம் சுரத்குமார் ஜெயந்தி விழா கொண்டாட்டம்

சென்னை: திருவண்ணாமலை, யோகி ராம் சுரத்குமாரின் ஜெயந்தி விழா, இரண்டு நாட்களாக வெகு விமரிசையாக நடந்தது. யோகி ராம் சுரத்குமாரின் சத்சங்கமிதி சார்பில், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, விருப்பம் தெரிவிக்கும் பக்தர்களின் வீட்டிற்கு சென்று, நாம ஜப யக்ஞம் செய்யப்படுகிறது. மேலும், இதன் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், குருநாதரின் ஜெயந்தி விழா, இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஜெயந்தி விழா, திருவல்லிக்கேணி ஸ்ரீ சத்ய பிரமோத பிரார்த்தனை மந்திர் உத்தராதி மடத்தில், கடந்த, 31ம் தேதி துவங்கியது. இரண்டாம் நாளான, நேற்று காலை, 6:00 மணியளவில், யோகி ராம்சுரத்குமார் திரு உருவப்படம் வீதி உலா நடந்தது. தொடர்ந்து, 7:00 மணிக்கு, பாதுகை அபிஷேகம் நடந்தது. பின், 9:00 மணி முதல், 1:00 மணி வரை லக்ஷார்ச்சனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு, சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !