உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆங்கில புத்தாண்டு: அய்யம்பேட்டையில் கந்த பெருமான் வீதியுலா கோலாகலம்

ஆங்கில புத்தாண்டு: அய்யம்பேட்டையில் கந்த பெருமான் வீதியுலா கோலாகலம்

அய்யன்பேட்டை: ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, அய்யன்பேட்டை கந்த பெருமான் ஊர்வலம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், கேரள செண்டை மேளம், கிராமவாசிகளை ஈர்த்தது. காஞ்சிபுரம் அடுத்த அய்யன்பேட்டை கிராமத்தில், நடுத்தெருவார்களுக்கு சொந்தமான கந்தப்பர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆங்கில புத்தாண்டுதோறும் கந்த பெருமான் பல்லக்கில் எழுந்தருளி, கிராமம் முழுவதும் ஊர்வலமாக வருவது வழக்கம். நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து அதிகாலை, 5:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் கந்தபெருமான் பல்லக்கில் எழுந்தருளினார். நடுத்தெருவில் இருந்து, பல தெருக்கள் வழியாக மீண்டும் வீதியுலா சென்று மீண்டும், 12:00 மணிக்கு கோவிலுக்கு வந்தடைந்தார். வீதியுலாவின் போது, நாதஸ்வரம், பேண்டு வாத்தியம், கேரளா செண்டை மேளம் இடம்பெற்றன. கேரள செண்டை மேளத்தை கேட்பதற்கும், கந்தபெருமானை வணங்குவதற்கும் ஏராளமானதெருவாசிகள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !