கிருஷ்ணகிரியில் ராதா கல்யாண உற்சவம்
ADDED :3204 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் சன்னதி தெருவில் உள்ள சங்கர மடத்தில், நேற்று ராதா கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை ராதா கிருஷ்ணர் படத்திற்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, மதியம் பஜனை நிகழ்ச்சியும், மாலை சிறப்பு பூஜையம் நடந்தது. நேற்று காலை ராதா, கிருஷ்ணர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பின், ஆஞ்சநேயர் உற்சவருக்கு பூஜையும், மதியம், குரு மகிமை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவும் நடந்தது. விழாவில், 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.