ராமர் பஜனை மடத்தில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
ADDED :3204 days ago
ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர், ராமர் பஜனை மடத்தில், உலக மக்களின் நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், நேற்று காலை, 10:00 மணிக்கு மேல், ராதா மாதவ திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக, கணேஷ் பாகவதர் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. இதையொட்டி, பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில், அப்பகுதியை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.