வடபழநியில் சிறப்பு தரிசன ஏற்பாடு
ADDED :3203 days ago
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், ஆங்கில புத்தாண்டை ஒட்டி, இன்று அதிகாலை முதல், இரவு வரை, வெள்ளி நாணய கவச அலங்காரம், தங்க கவச அலங்காரம், சந்தனகாப்பு மற்றும் புஷ்ப அலங்காரம் போன்ற வைபவங்கள் நடக்க உள்ளன. பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு வழி மற்றும் பொது தரிசனம் செய்ய, வடபழநி ஆண்டவர் கோவில் தெருவிலுள்ள, தெற்கு ராஜகோபுரம் வழியாக, பக்தர்கள் செல்லலாம்.