ஓசூரில் அய்யப்ப பூஜை
ADDED :3202 days ago
ஓசூர்: ஓசூரில் உள்ள விஜய விநாயகர் கோவிலில், 25ம் ஆண்டு அய்யப்ப பூஜை நடந்தது. ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில் உள்ள விஜய விநாயகர் கோவிலில், தர்ம சாஸ்தா பக்த சபா சார்பில், 25ம் ஆண்டு அய்யப்ப பூஜை நிகழ்ச்சி, 24 காலை, 5:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, பக்தியும், தர்மமும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு, மகா கணபதி ஹோமம், 6:00 மணிக்கு, அஷ்டோத்திரம், 9:00 மணிக்கு, தர்ம சாஸ்தா பக்த சபா சார்பில் பஜனை நடந்தது. மதியம், 3:30 மணிக்கு சுவாமி திருவீதி உலா, 6:30 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது.