உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவீன உலகில் குழந்தை வளர்ப்பு ..

நவீன உலகில் குழந்தை வளர்ப்பு ..

குழந்தை வளர்ப்பில் முக்கியமானது பெற்றோர் அரவணைப்பு. பொழுது போக்கு சாதனங்களால் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது. கல்வி கற்பிப்பதிலும் தவறுகள் நிறைய நடக்கின்றன. பிள்ளைகள் படித்து,  பெரிய வேலையில் சேர்ந்து  நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றே  பெற்றோர் நினைக்கிறார்கள். நம் கலாச்சாரம், பண்பாடு பற்றி  அவர்களுக்குக் கற்றுத் தர விரும்புவதில்லை. பள்ளிப்பாடத்திலும் பண்பாடு சார்ந்த விஷயங்கள் அறவே இல்லை. இதனால் குழந்தை வளர்ப்பில் பயப்படும் நிலை உருவாகி விட்டது. குழந்தைகள் தொந்தரவு செய்யாமல் இருக்க அலைபேசி, நெட்டில் விளையாடக் கற்றுக் கொடுப்பதைக் கைவிட்டு பெற்றோர் அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். பாடத் திட்டத்தில் கலாசாரம், பண்பாடு சார்ந்த இலக்கியங்களைத் தாய் மொழியில் கற்பிக்க வழிவகை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !