உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனின் திருத்தூதர்கள்!

இறைவனின் திருத்தூதர்கள்!

அல்லாஹ்வின் திருத்தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் எனப்படுகின்றனர். மனித இனத்திற்கு நல்வழி காட்டி, அவர்களை தீய செயல்களில் ஈடுபடாமல் காப்பதற்காக அல்லாஹ்வின் கட்டளைப்படி தோன்றியவர்கள் இவர்கள். முதல் தூதராக ஆதம் (அலை) தோன்றினார். இறுதியாக, முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் என்னும் நபிகள் நாயகம் தோன்றினார். இதை குர்ஆன், “(நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு முன்னரும் (பல) தூதர்களை அனுப்பி இருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் உமக்கு கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை,” என மெய்ப்படுத்துகிறது. தற்காலத்தில் நபிகள் நாயகத்தின் கருத்து போதனைகளே பின்பற்றப்படுகிறது. இதற்கு காரணம் இருக்கிறது. நபிகள் நாயகத்திற்கு முன்பு தோன்றிய தூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட சட்டங்கள், அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு ஏற்புடையதாக இருந்தது. ஆனால், நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்ட கட்டளைகளும், சட்டங்களும் உலகத்தின் இறுதிக்காலம் வரையில் ஏற்புடையதாக அருளப்பட்டது. எனவேதான், அந்த அருள் மொழிகள் எல்லாராலும் பின்பற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !