உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் முள் படுக்கையில் பெண் சாமியார்

முத்துமாரியம்மன் கோயிலில் முள் படுக்கையில் பெண் சாமியார்

திருப்புவனம்: லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பெண் சாமியார் முள்படுக்கையில் அமர்ந்து அருள்வாக்கு  கூறினார். லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத பூஜை சிறப்பாக நடைபெறும். 37வது  மண்டல மார்கழி பூஜை 108 சங்கு அபிசேகத்துடன் தொடங்கியது. காலை ஆறு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம்  1 மணிக்கு கோயில் முன் ஏழு அடி உயரத்தில் உடைமுள், இலந்தை முள், இலைகற்றாழை முள், காட்டு கருவேல மர முள், நாட்டு  கருவேல மர முள் ஆகியவற்றினால் ஆன மேடை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 11:30 மணிக்கு நாகராணி  அம்மையார் கோயில் குளத்தில் நீராடி முள் மேடை மீது அமர்ந்து அருள்வாக்கு சொல்லும் நிகழ்வு தொடங்கியது. சிவகங்கை,  ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். ஏற்பாடுகளை  மாரிமுத்து சுவாமி உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !