திருமலையில் லட்சம் பக்தர்கள் தரிசனம்
ADDED :3200 days ago
திருப்பதி: புத்தாண்டு தினத்தன்று, திருமலையில், ஏழுமலையானை, ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி, திருமலை ஏழுமலையானை தரிசிக்க, ஆங்கில புத்தாண்டு அன்று, ஏராளமான பக்தர்கள் திரண்டனர்; அதனால், வெள்ளி வாசல் அருகில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, வரிசை முறை பின்பற்றப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும், 1.2 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இதே நாளில், உண்டியல் காணிக்கையாக, 2.74 கோடி ரூபாய் பெறப்பட்டதாக, தேவஸ்தானம் தெரிவித்தது.