உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராதா கல்யாண மஹோத்ஸவம் துவக்கம்

ராதா கல்யாண மஹோத்ஸவம் துவக்கம்

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் அருகே இடையர்பாளையத்தில், ஆஸ்திக சமாஜம் சார்பில், 13ம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவம் நேற்று துவங்கியது. வி.ஆர்.ஜி., திருமண மண்டபத்தில் நேற்று காலை, 5:30 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் உற்சவம் தொடங்கியது. மாலை, 6:00 மணிக்கு உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினரின், குருகீர்த்தனைகள் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை, 9:30 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி, மாலை, 3:00 மணிக்கு நாராயணீயம், மாலை, 6:00 மணிக்கு கிருஷ்ண லீலா தரங்கிணி பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இம்மாதம், 8 வரை தினசரி சிறப்பு பூஜைகள், பக்தி இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !