நம்பிக்கை வேண்டும்
கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் சந்தேகப்படக்கூடாது. ஒரு மாணவனுக்கு தனது பாடங் களில் சந்தேகம் வரக்கூடாது. அது÷ பால் தான் ஆண்டவரை வணங்குவதிலும், அவரை நம்புவதிலும் ஏற்படும் சந்தேகம் கூடாது.சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பானவன். அப் படிப்பட்ட மனுஷன், தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப் பானாக, என்கிறது பைபிள். எவனாகிலும் இந்த மலையை பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்கிறார் இ யேசு. ஆம்... எதையும் சந்தேகத் துடன் பார்க்கக்கூடாது. மாணவர்கள், படிப்பில் ஏற்படும் சந்தேகத்தை ஆசிரியரிடமும், குடும்பத்தினர் அவர்களுக்கிடையே இருக்கும் பிரச்னையை பேசியும் தீர்த்துக் கொள்ள வேண்டும். சந்தேகத்துடன் இருந்தால் நிம்மதியே இருக்காது. எனவே, சந்÷ தகம் இருந்தால் அதனை உடனே போக்கி, நம்பிக்கையை மனதில் வளர்த்து கொள்வதை கிறிஸ்துமஸ் கால சிந்தனையாகக் கொள்ளுங்கள்.