உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 8ல் வைகுண்ட ஏகாதசி விழா

சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 8ல் வைகுண்ட ஏகாதசி விழா

ஊத்துக்கோட்டை: சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், வரும், 8ம் தேதி, வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை, பிராமணத் தெருவில் உள்ளது, சுந்தரவல்லி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவிலில், மார்கழி மாதம் பிறந்த நிலையில், வரும், 8ல், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம், அதிகாலை, 4:00 மணிக்கு, கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை, 7:00 மணி முதல், மறுநாள் காலை, 6:00 மணி வரை, சுந்தர வரதராஜர் சேவா பஜனைக்குழு மற்றும் சென்னை மாருதிராயன் பஜன்மண்டலி ஆகிய பஜனைக் குழுக்களின் தொடர் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !