உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலுக்கு ஹெலிகாப்டரில் வந்த ஆன்மிகவாதி

ராமேஸ்வரம் கோயிலுக்கு ஹெலிகாப்டரில் வந்த ஆன்மிகவாதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ராமாயண சொற்பொழிவு ஆற்றுவதற்காக, குஜராத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி நேற்று ஹெலிகாப்டரில் வந்தார்.குஜராத்தை சேர்ந்தவர் முராரி பாபு,72. இவர் ராமாயண சொற்பொழிவாளர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், சொற்பொழிவாற்றவும் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்ட முராரி பாபு, நேற்று மதியம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் ஹெலிபேடில் வந்திறங்கினார். இவரது உதவியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றொரு ஹெலிகாப்டரில் வந்திறங்கினர்.ஒரே நேரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் தரை இறங்கியதை பார்ப்பதற்காக அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். ராமேஸ்வரம் வந்த முராரி பாபுவை மண்டபத்தில் பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் வரவேற்றார். அங்கிருந்து கோயிலுக்கு சென்ற அவர் சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !