விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆருத்ரா தரிசன பெருவிழா!
திருவாரூர்: தியாகராஜசுவாமி திருக்கோயிலை சேர்ந்த அன்னதான கட்டளைக்கு சொந்தமான, பதஞ்சலி மனோகர் கோயில் திருவிளமர் எனப்படும் விளமலில் அமைந்துள்ளது. சிவபாதஸ்தலமாவ இங்கு ஆரூத்ரா தரிசன பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். பதஞ்சலி-வியாக்கிரபாத மகரிஷிகளுக்கு அதிகாலை 4.30 மணிக்கு லிங்கத்தில் எழுந்தருளி நடராஜ பெருமான் ருத்ரபாதம் அருளுதலும், திருவாரூர் தியாகேசப் பெருமான் காலை 6.00 மணிக்கு அருள்மிகு பதஞ்சலி-வியாக்கிரபாத மகரிஷிகளுக்கு பாததரிசனம் அருளுதல் ஆருத்ரா தரிசனம் ஆகும்.
நிகழ்ச்சி நிரல்:
10.1.2017- இரவு 7.30 மணியளவில் திருச்சபையில் அ/மி நடராஜபெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
11.1.2017- அதிகாலை 4.30 மணிக்கு லிங்கத்தில் எழுந்தருளி அ/மி நடராஜ பெருமான் பக்தர்களுக்கு பாத தரிசனம் அருளுதல், அதிகாலை 4.45 மணிக்கு அ/மி பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகள் அ/மி தியாகராஜா சுவாமி திருக்கோயில் செல்லுதல். காலை 6.00 மணிக்கு அ/மி தியாகராஜ சுவாமி அ/மி பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளுதல்
அன்று அதிகாலை 4.30 மணிமுதல் மாலை 3.00 மணி வரை லிங்கத்தில் நடராஜப் பெருமான் பாததரிசனத்தில் காணலாம். 11.1.2017 இந்நிகழ்ச்சியில் வேதபாராயணம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்று மதியம் 11.30 மணிமுதல் 3.00 மணிவரை அன்னதானம் நடைபெறும். இடதுபாத தரிசன சிறப்பு: திருவாதிரை நாளில் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு சிவபெருமான் காட்சி அருள்வது இடது பாத தரிசனம் ஆகும். இடது பாகம் சக்தியின் பாதம் ஆனதால் இடது பாத தரிசனம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். தடைப்படும் திருமணம் மக்கள் பேறு இல்லாமை போன்றவை நீக்கி பூரண நலமும் செல்வ செழிப்பும் அருளுவது இடது பாத தரிசனமாகும்.