குருவித்துறை கோயிலில் ஜன.8ல் சொர்க்கவாசல் திறப்பு
குருவித்துறை: குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.,8ல் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இக்கோயிலில் ஒரே சந்தனமரத்தால் வடிவமைக்கப்பட்ட 7 அடி உயரத்தில் சுயம்புவான ஸ்ரீதேவி, பூதேவியருடன் சித்திரரதவல்ல பெருமாள் சுவாமி தைலகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வைகுண்டஏகாதசியை முன்னிட்டு, அன்று அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பரமபதவாசல் வழியாக தேவியருடன் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். பின்னர் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்க்கு மங்களாசாசனம் நடக்கிறது. புஷ்பஅலங்காரத்தில் தேவியருடன் சுவாமி ஆடிவீதியில் எழுந்தருளி, ஆயிரங்கால் மண்டபத்தில் சேவை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள் செய்துள்ளார். சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா செய்துள்ளார்.