குமரசுப்ரமணிய சுவாமி கோயிலில் பூமிபூஜை பிப்.3ல் கும்பாபிஷேகம்
ADDED :3203 days ago
பரமக்குடி: பரமக்குடி குமரசுப்ரமணிய சுவாமி கோயிலில் யாகசாலைக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பிப்., 3ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோயிலில் அர்த்தமண்டபம், மகாமண்டபம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பிப்.,3ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக பிப்.,1 முதல் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. இதற்கான ஹோமகுண்டம் அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் டிரஸ்டிகள் அகஸ்தியன், மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.