தீவனூர் பெருமாள் கோவிலில் நாளை ஏகாதசி விழா துவக்கம்
ADDED :3206 days ago
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நாளை, ௧௦ம் ஆண்டு ஏகாதசி பெருவிழா துவங்குகிறது. திண்டிவனம் வட்டம், தீவனுார் கிராமத்தில் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ௧௦ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெரு விழா, நாளை (௭ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி, நாளை இரவு ௭:௦௦ மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு யாகசாலை பூஜைகளும், சிறப்பு திருமஞ்சனமும் நடக்கிறது. மறுநாள் அதிகாலை ௫:௦௦ மணிக்கு பரமபத வாயில் திறப்பும், தொடர்ச்சியாக ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் முனுசாமி செய்துள்ளார்.