பெருமாள் கோவில்களில் 8ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு
ADDED :3205 days ago
நெட்டப்பாக்கம்: வைகுண்ட ஏகாதசியையொட்டி, நல்லாத்துார் மற்றும் வடுக்குப்பம் பெருமாள் கோவில்களில், வரும் ௮ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஏம்பலம் அடுத்துள்ள நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில், வரும் 8ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை 4.30 மணிக்கு திருப்பாவை சேவை, இரவு 7.௦௦ மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் வீதியுலா நடக்கிறது. நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், வரும் 8ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்று காலை 5.௦௦ மணிக்கு திருப்பாவை சேவை நிகழ்ச்சி நடக்கிறது.