திருப்பதிக்கு அனுப்ப இன்று பூக்கள் வழங்கலாம்
ADDED :3207 days ago
சேலம்: திருப்பதிக்கு பூக்கள் அனுப்ப விரும்புபவர்கள், இன்று வழங்கலாம்.இதுகுறித்து, சேலம் திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகி பாலசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கை: திருமலை திருப்பதியில், ஜன., 8ல் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு, சேலத்தில் இருந்து, 2.5 டன் பூக்களை சரங்களாக தொடுத்து, அனுப்ப உள்ளோம். அதற்காக, பூக்கள் கொடுக்க விரும்புவோர், மாலை, சரங்களாக தொடுக்க விருப்பம் உள்ளோர், சேலம், சங்கர் நகர், வன்னிய சத்திரியர் திருமண மண்டபத்தில், இன்று காலை, 7:00 முதல், மாலை, 4:00 மணி வரை பங்கு கொள்ளலாம். மேலும், பூக்களை வழங்க விரும்புவோருக்கு வசதியாக, மண்டபத்தில் பூக்களின் விற்பனை ஸ்டால்கள் செயல்பட வாய்ப்புள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.