சாய்பாபாவுக்கு பாலாபிஷேகம்
ADDED :3207 days ago
ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அடுத்த, பத்மாபுரம் சாய்பாபா கோவிலில், நேற்று, காலை 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சுவாமிக்கு நடந்த பாலாபிஷேகத்தை தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. ஆர்.கே.பேட்டை, சோளிங்கர், பத்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தியான மண்டபத்தில், பக்தர்கள் தியானத்தில் ஈடுபட்டனர். மதியம், 12:00 மணிக்கு, தேஜ் ஆரத்தி நடந்தது. இரவு 7:00 மணிக்கு, சுவாமி பல்லக்கில் எழுந்தருளினார். இதேபோல், பள்ளிப்பட்டு மற்றும், கரிம்பேடு சாய்பாபா கோவில்களிலும், நேற்று, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது.