உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கச்சூர் தியாகராஜர் கோவில் தேர் பாதுகாப்பு கொட்டகையை பார்க்குமா?

திருக்கச்சூர் தியாகராஜர் கோவில் தேர் பாதுகாப்பு கொட்டகையை பார்க்குமா?

செங்கல்பட்டு: திருக்கச்சூர் தியாகராஜ கோவில் தேருக்கு, பாதுகாப்பு கொட்டகை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சிங்கபெருமாள்கோவிலை அடுத்த, திருக்கச்சூர் கிராமத்தில், அஞ்சலாட்சி அம்மன் உடனுறை அமிர்த தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின், வேலுார் இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலின் பழமையான தேர் பழுதடைந்ததால், 33 ஆண்டுகளுக்கு முன், தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, புதிய தேர் செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து, புதிய தேர் செய்யப்பட்டு, 2015, ஏப்ரலில் வெள்ளோட்டம் நடைபெற்றது. அப்போது, தேருக்கு, பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்பட்டது. அது, கடந்த மாதம், புயலில் பறந்து விட்டது. எனவே, தேருக்கு புதிதாக, வலுவான பாதுகாப்பு கொட்டகை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !