உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்க்கவாசல் திறப்பு விழாவில் சிங்கபெருமாள்கோவில் நரசிம்மன்

சொர்க்கவாசல் திறப்பு விழாவில் சிங்கபெருமாள்கோவில் நரசிம்மன்

செங்கல்பட்டு : வைகுண்ட ஏகாதசியையொட்டி, சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்மப்பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்மப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறும். இந்த ஆண்டு, சொர்க்க வாசல் திறப்பு விழாவையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, காலை, 4:00 மணிக்கு, நரசிம்மப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பத்ரி நாராயணன் கோலத்தில் எழுந்தருளினார். அதன்பின், சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதையடுத்து, பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதித்தனர். கோவில் வளாகத்திலிருந்து, தேசிய நெடுஞ்சாலை வரை, 1 கி.மீ.,க்கு நீண்ட வரிசையில் வந்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, வண்டலுார் காவல் துணை கண்காணிப்பாளர், முகிலன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !