முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3234 days ago
கமுதி: கமுதி கோட்டைமேடு முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடந்தது. நேற்று காலை 6வது யாகசாலை பூஜைக்கு பின் கடம்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. டி.எஸ்.பி., அசோகன் தலைமையில் போலீசார், பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.