அழகிய கூத்தர் செப்பறை கோயிலில் தேரோட்டம் விமரிசை: இன்று ஆருத்ரா
திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் அழகிய கூத்தர் செப்பறை கோயிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி நேற்றுதேரோட்டம் விமரிசையாக நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தில், தாமிரபரணி நதிக்கரையின் இடதுகரையில் அமைந்துள்ளதுஅழகிய கூத்தர் செப்பறை ஆலயம். இங்கு செப்புஅறைகளால் வேயப்பட்ட தாமிரசபை அமைந்துள்ளதால்,செப்பறை கோயில் என அழைக்கப்படுகிறது. சிதம்பரம்
நடராஜர் கோயிலில் விழாக்கள் நடக்கும் அதே தினங்களில் இங்கும் தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் நடக்கின்றன. ஜனவரி 2ம் தேதி திருவாதிரை விழா துவங்கியது.
திருவிழா காலங்களில், சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை, பாராயணம், நீராஞ்சன தீபாராதனை நடந்தது. கடந்த 8ம் தேதி, அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளினார். நேற்று காலை 8 மணிக்கு சுவாமி, அம்பளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு அழகிய கூத்தர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பகலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டுதேரினை இழுத்தனர். இன்று 11ம் தேதி, அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம், காலை 5.30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை, மாலை 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதிஉலா, இரவு 7.30 மணிக்கு சிறப்பு
அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.