பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்
மதுரை: பழநி தைப்பூசத்தையொட்டி பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கும் விழா, ஒட்டன்சத்திரத்தில் வருகிற பிப். 7ம் தேதி நடக்கிறது.
இந்த அறப்பணிக்காக,"அன்னதான குடில் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் சன்னதி அருகே "எல்.என்.திருமண மஹாலில் சென்னை அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு 7வது ஆண்டாக அமைத்துள்ளது. இங்கு காலை 7 மணி முதல் 10 மணி வரை சிற்றுண்டியும், மதியம் 12 மணி முதல் விருந்து சாப்பாடும் பாதாயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிறுவாபுரி முருகன் புகழ்பாடும் இக்குழுவினர் ஆற்றிவரும், ஆன்மிக பணிகளில், பழநி தைப்பூச அன்னதானம் பிரதானமானது. "பல கைகள் சேர்ந்து, அன்னம்பாலிப்பது அளப்பறிய அறப்பணி என்ற தாரக மந்திரத்திடன் நடக்கும். இப்பணியில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
99443 09719, 98421 98889