உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் தாமிரசபையில் ஆருத்ரா தரிசன திருநடனம்

நெல்லையப்பர் தாமிரசபையில் ஆருத்ரா தரிசன திருநடனம்

திருநெல்வேலி :நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை விழா கடந்த ஜன.2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினந்தோறும் காலையில் திருவெம்பாவை வழிபாடு நடந்து வருகிறது. மாலையில் நடராஜர் சன்னதியில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மார்கழி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை உற்சவத்தை முன்னிட்டு கோயில் 2வது பிரகாரத்தில் அமைந்துள்ள தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அதிகாலையில் கோ பூஜை, பசு தீபாராதனையும், அதன்பின் தாமிர சபையில் நடராஜர் திருநடன காட்சியும், நடன தீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு திருவாதிரை களி, தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !