உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) சிறப்பான வளர்ச்சி

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) சிறப்பான வளர்ச்சி

சகோதர பாசத்துடன் பழகும் கன்னி ராசி அன்பர்களே!

சனி, கேது மாதம் முழுவதும் சாதகமாக நின்று சிறப்பான வளர்ச்சியை உண்டாக்குவர். செவ்வாய் ஜன.16  வரையும், புதன்  ஜன.30 வரையும் நன்மையளிப்பர். குரு பகவான் ஜன.16ல்   2ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம்.  குருவால் ஏற்பட்ட தடை அனைத்தும்  மறையும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி ஆதாயம் அதிகரிக்கும். பகைவர்கள் சரணடையும் நிலை உருவாகும். குடும்பத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும்.  ஜன.30க்கு பிறகு  கணவன், மனைவி இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். பிப்.17,18,19ல் பெண்கள்  உதவிகரமாக இருப்பர்.  ஜன.25,26ல் உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் பிப்.9,10ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. கண், சரும பிரச்னை தலைதுாக்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். சுபவிஷயம் குறித்த பேச்சில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.  பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை சிறக்கும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர்.  சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில்  சனி பகவானால் வளர்ச்சி உண்டாகும்.  முக்கிய முடிவுகளை ஜன.30க்குள் எடுப்பது நன்மையளிக்கும். அதன் பிறகு வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். மறைமுகப் போட்டியாளர்களால்  இடையூறுகள் குறுக்கிட்டாலும் குருவின் பலத்தால்  எளிதில் முறியடிப்பீர்கள். ஜன. 30,31 ல் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஜன.15,16,20,21, பிப்.11,12ல் பண விரயம் ஏற்படலாம். முயற்சியில் தடை குறுக்கிடலாம் கவனம்.

பணியாளர்கள்  பதவி உயர்வு காண்பர். எதிர்பார்த்த பணி, இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை ஜன.16க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஜன.30க்கு பிறகு வேலையில் பொறுமை தேவை. சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம். பிப்.7,8ல் முன்னேற்றத்திற்கான சம்பவம் நடக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடை ஜன.27க்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். தொழில் ரீதியான பயணத்தின் மூலம் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல் ரீதியான பயணத்தை முடித்து வெற்றியுடன் திரும்புவர். எதிர்பார்த்த புகழ் பாராட்டு வந்து சேரும்.  தொண்டர் ஆதரவைப் பெற பணம் செலவழிக்க நேரிடலாம்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர்.  ஜன.30க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் பொருளாதார வளம் பெறுவர். மானாவாரிப் பயிர்களின் மூலம் அமோக விளைச்சல் உண்டாகும். புதிய சொத்து ஜன.16க்குள் வாங்கலாம். நிலப்பிரச்னைக்கு சுமூகத்தீர்வு கிடைக்கப் பெறுவர்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஜன.27,28,29ல் நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.

பெண்கள் வாழ்வில் சிறப்படைவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். தனியார் நிறுவனத்தில் பணி புரிபவர்கள்  புதிய பதவி கிடைக்கப் பெறுவர். ஜன.25,26ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிப்.1,2ல் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என அடிக்கடி சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: ஜன.14,17,18,19,22,23,24,30, 31, பிப். 1,2,7,8,,9,10

கவன நாள்: பிப்.3,4 சந்திராஷ்டமம். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட எண்:  7,9   நிறம்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்: சூரியனைத் தினமும் காலையில் வணங்குங்கள். நாக தேவதையை ராகு காலத்தில் வழிபடுங்கள். தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபடுங்கள்.  புதன்கிழமை குலதெய்வத்தை வணங்குங்கள்.  ஏழைகளுக்கு துவரை  தானம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !