உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா

காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா

ஊட்டி: ஊட்டி அருகே காந்தள் பகுதியில் உள்ள விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், ஆருத்ரா தரிசன திருக்கல்யாண உற்சவ விழா விமரிசையாக நடந்தது. இந்த விழாவையொட்டி,  10ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, மகாயாகம், தீபாராதனை, பகல், 11:30 மணிக்கு மேல், 12:00 மணிக்குள் திருக்கல்யாண வைபவம், ஊஞ்சல் வைபவம், அன்னதானம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, சிவகாமி அம்பாள் உடனமர் நடராஜ பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில், நீலகிரி மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். நேற்று காலை, 6:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தட்சிணாமூர்த்தி திருமடாலய அறங்காவலர் குழு, காசி விஸ்வநாத சுவாமி சேவா சங்கம், ஆலய முன்னேற்ற சங்கம், விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !