உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெ.நா.பாளையத்தில் ஆருத்ரா தரிசனம்

பெ.நா.பாளையத்தில் ஆருத்ரா தரிசனம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நேற்று அதிகாலை மூலவரான, சொக்கலிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின், நடராஜர் கனகசபையில் இருந்து புறப்படாகி, பஜனை கோஷ்டியாருடன் உற்சவ மைதானத்தில் எழுந்தருளினார். பின், அம்பாள், நடராஜருடன் ஊடல் கொண்டு, கோபித்துக் கொண்டு செல்லுதல், அம்பாளை சமாதானப்படுத்த, நடராஜருக்காக சுந்தரமூர்த்தி நாயனார், துாது செல்லும் வைபவமும் நடந்தது. அப்போது, சுந்தரமூர்த்தி நாயனார், திருவெண்பா பாடும் நிகழ்வும் நடந்தது. அம்பாள், நடராஜருடன் கனகசபையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த மகா தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதமாக, திருவாதிரை களி வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் சுந்தரம் தலைமையில், கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !