சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம்
சிங்கம்புணரி, சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளித்தேரில் புதிய உற்சவ மூர்த்தியாக சுவாமி வலம் வந்தார் .இக்கோயிலுக்கு சிவகங்கை சமஸ்தானம், கிராமத்தார்கள், பக்தர்கள் சார்பில் 200 கிலோ வெள்ளியில் ஒரு கோடி ரூபாய் செலவில் வெள்ளித் தேர் செய்யப்பட்டு கடந்த வருடம் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளித்தேருக்காக ஒன்றரை அடியில் தனியாக ஐம்பொன்னால் ஆன உற்சவமூர்த்தி, தங்கமுலாம் பூசப்பட்ட திருவாச்சி செய்யும் பணி நடந்துவந்தது. பணி நிறைவுபெற்றதைத் தொடர்ந்து இதற்கான வெள்ளோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தேவிமார்களுடன் சேவுகப்பெருமாள் அய்யனார் தேரில் வீற்றிருக்க, பக்தர்கள் கோயில் பிரகாரத்தில் சுற்றி வடம் பிடித்து இழுத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாகிகள், கிராமத்தார்கள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.