திருவாதிரையை முன்னிட்டு 108 தம்பதியர் பூஜை
ADDED :3235 days ago
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு, 108 தம்பதியர் பூஜை நடந்தது. மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு மாரியம்மன் கோவில் திருமாங்கல்ய நோன்பு கடைபிடிக்கப்பட்டது. இதில் நடந்த தம்பதியர் பூஜையில், 108 தம்பதியர் பங்கேற்றனர். நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. தெடார்ந்து சிறப்பு பூஜைகள், சங்கல்பம், பஞ்சகவ்யம், ஹோமம், பாராயணம், நட்சத்திர, நவகிரகம் உட்பட பல்வேறு ஹோமத்துடன் தீபாராதனையும் நடந்தது. இறுதியில் பூஜையில் பங்கேற்ற அனைவரும் மாங்கல்ய தாரணம் செய்து கொண்டனர்.