ஸ்ரீவி.,வைத்தியநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :3235 days ago
ஸ்ரீவில்லிபுத்துார். ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடைதிறக்கபட்டு, நடராஜர் மற்றும் பைரவருக்கு ரகு பட்டர் தலைமையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அதன்பின் காலை 5:00 மணிக்குஆருத்ர தரிசனத்தை பக்தர்கள் தரிசித்தனர். உற்சவர் நடராஜர் வீதியுலாக்கு எழுந்தருளினார்.ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் நாராயணி தலைமையில் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்தனர்.