கொரளூர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3386 days ago
மயிலம் : கொரளூர் கிராம பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மயிலம் அடுத்த கொரளூர் கிராமத்திலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று மார்கழி உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். மதியம் 3:00 மணிக்கு வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.