பழநி கோயிலில் ரூ.1.58 கோடி வசூல்
ADDED :3534 days ago
பழநி: பழநிமலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் 12 நாட்களுக்குபிறகு உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் தங்கம் 365 கிராம், வெள்ளி 5,450 கிராம், அமெரிக்கா, மலேசியா உட்பட வெளிநாட்டு கரன்சிகள் 298, ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 58லட்சத்து 33ஆயிரத்து 708 கிடைத்துள்ளது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், கோயில், வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.