உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தன் கோட்டை வாய்க்கால் கோவில் பக்தர்கள் வேதனை

நந்தன் கோட்டை வாய்க்கால் கோவில் பக்தர்கள் வேதனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சித்தலவாடியில் உள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலின் பின்புறத்தில், நந்தன் கோட்டை பாசன வாய்க்கால் செல்கிறது. இங்கு, குடிமகன்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இரவு நேரத்தில் மது அருந்தும் அவர்கள், பாட்டில்கள் மற்றும் உணவு பொட்டலங்களை வாய்க்காலில் வீசி செல்கின்றனர். இப்பகுதி, சமூக விரோத கும்பலின் புகலிடமாக மாறி வருவதால், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக அமைந்து வருகிறது. எனவே, போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு, சட்ட விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !