உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிக்கு பாதயாத்திரை: முருக பக்தர்கள் ஆர்வம்

பழநிக்கு பாதயாத்திரை: முருக பக்தர்கள் ஆர்வம்

குமாரபாளையம்: குமாரபாளையம், பள்ளிபாளையம் வழியாக, முருக பக்தர்கள் பழநி கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். சேலம், நாமக்கல் மாவட்ட முருக பக்தர்கள், கடந்த ஒரு வாரமாக பள்ளிபாளையம், குமாரபாளையம் வழியாக, காவிரி ஆற்றுப்பாலத்தின் வழியாக, பழநி மலை கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். குமாரபாளையம் நகரில், பாலமுருகன் கோவில் குருசாமி ஆறுமுகம் தலைமையில், பாதயாத்திரை புறப்பட்டனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பொதுமக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றும் விதமாக உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !