இளையான்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
                              ADDED :3208 days ago 
                            
                          
                          இளையான்குடி: இளையான்குடியில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இளையான்குடியில் குறைந்த அளவே மழை பெய்ததால் விவசாயம் பொய்த்துப் போனது. வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கிணறு மற்றும் போர்வெல்களில் கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் சமுத்திரம் ஊரணி வறட்சியினால் வறண்டு கிடப்பதால் தண்ணீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று சமுத்திரம் ஊரணி மேற்கே மதினா ஸ்டார் கபடிதிடலில் அப்துல் ரவூப் தலைமையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.