மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் திருவிழா
                              ADDED :3208 days ago 
                            
                          
                          நடுவீரப்பட்டு: கடலுார் அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு கரிநாள் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 11:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, வள்ளி தேவசேனா சுப்ரமணியர் உள்ளிட்ட அனைத்து மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 10:00 மணிக்கு விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.