உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுண்டம்மன் கோவில் விழா: மகாஜோதி திருவீதி உலா

சவுண்டம்மன் கோவில் விழா: மகாஜோதி திருவீதி உலா

குமாரபாளையம்: குமாரபாளையம், சவுண்டம்மன் கோவில் திருவிழாவில், மகாஜோதி திருவீதி உலா நடந்தது. குமாரபாளையம், ராஜா வீதி சவுண்டம்மன் கோவில் திருவிழா, கடந்த, 13ல் துவங்கியது. கடந்த, 14ல், சாமுண்டி அழைப்பு நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு துவங்கிய மகாஜோதி திருவீதி உலா, ராஜா வீதி, சேலம் பிரதான சாலை, தம்மண்ணன் சாலை, அக்ரஹாரம், புத்தர் வீதி உள்ளிட்ட பல முக்கிய வீதிகளின் வழியாக, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவிலை வந்தடைந்தது. காலை, 6:00 மணிக்கு, மஞ்சள் நீர் திருவீதி உலா, இரவு சத்தாபரண அலங்கார திருவீதி உலா, வாணவேடிக்கை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !