உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நகரியில் 24 உற்சவர்கள் சந்திப்பு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நகரியில் 24 உற்சவர்கள் சந்திப்பு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நகரி: காணும் பொங்கல் திருவிழாவையொட்டி, நடந்த பார் வேட்டை விழாவில், 24 உற்­சவர் சுவாமிகள் சந்திப்பு நகரியில் நடந்தது.

சித்துார் மாவட்டம், நகரி மண்டபம் அருகே எழுந்தருளியுள்ள வழிதுணை விநாயகர் கோவில் வளாகத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் பண்டிகையை யொட்டி, மலைச்சுற்று விழா மற்றும் பார்வேட்டை உற்­சவம் நடைபெறும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில், உற்­சவர்கள் நாராயணவனம் கல்யாண வெ ங்கடேச பெருமாள், கரிம்பேடு நாததீஸ்வரர்,நகரி அகத்தீஸ்வரர், கரகண்டேஸ்வரர், தேசூர் அகரம் வேணுகோபாலசுவாமி, கிருஷ்ணாராமாபுரம் கைலாசநாதர், சத்திரவாடா சிதம்பரேஸ்வரர், பாலமங்கலம் வாலீஸ்வரர், கம்பரபாளையம், மீனாட்சியம்மன், தும்பூர், தும்பூஸ்வரர் உட்பட, 24 பகுதிகளில் இருந்து, 24 உற்­சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும், சந்திப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேங்காய் உடை த்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !