உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கையன்புதுார் மாலை கோவிலில் உருவ பொம்மை வழிபாடு

சிங்கையன்புதுார் மாலை கோவிலில் உருவ பொம்மை வழிபாடு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கையன்புதுார் மாலை கோவிலில், காணும் பொங்கல் மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து கிருஷ்ணனை வழிபட்டும், நோய் நீங்க உருவ பொம்மை வைத்தும் வழிபாடும் செய்தனர். கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மனிதர்களுக்கும், மாட்டுக்கும் நோய் ஏற்பட்டால், அதன் உருவ பொம்மை வாங்கி வைத்து கிருஷ்ணனை வழிபட்டால், நோய் நீங்குவது ஐதீகமாக இருந்து வருகிறது. பொங்கல் துவங்கியதில் இருந்து மூன்று நாட்கள் மாடுகள் கருவுற்று பிறந்தால், அந்த மாட்டை சாமிக்கு நேர்ந்துவிடப்படுகிறது. கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கையன்புதுார் மாலை கோவிலுக்கு மாடுகளை அழைத்து சென்று வழிபடுவது இப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது. அதன்படி நேற்றுமுன்தினம் காணும் பொங்கல் அன்று கல்லாபுரம், சிங்கையன்புதுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், பொங்கல் அன்று பிறந்த மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஊர்வலமாக கொட்டு மேளத்துடன் அழைத்து வந்து சிங்கையன்புதுார் மாலை கோவில் முன்பு நிறுத்தி மாடுகளுக்கு கோ பூஜை செய்யப்பட்டது. பின், மாடு, மனிதன் போன்ற உருவ பொம்மைகளை வாங்கி வைத்து பொதுமக்கள் கிருஷ்ணனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !