காளியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :3228 days ago
இடைப்பாடி: இடைப்பாடி அருகே, காளியம்மன் கோவிலில், கலசங்களுக்கு புனிதநீர் ஊற்ற, 2,000க்கும் மேற்பட்டோர், புனிதநீர் கொண்டு வந்தனர். இடைப்பாடி அருகே, மசையந்தெரு காட்டுவளவு பகுதியில், ஓம்சக்தி காளியம்மன் கோவிலுக்கு, புதிய கோபுரம் கட்டப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அதற்காக, கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், குடங்களில் புனிதநீர் கொண்டு வந்தனர். முன்னதாக, இடைப்பாடி பஸ்ஸ்டாண்ட், மேட்டுத்தெரு, நைனாம்பட்டி, மசையந்தெரு ஆகிய பகுதிகள் வழியாக, ஊர்வலம் சென்று, புனிதநீர், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.