உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.81 கோடி

பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.81 கோடி

பழநி; பழநி ஞானதண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு தைப்பூசவிழா, பொங்கல் பண்டிகை விடுமுறையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் உண்டியலில் 12 நாட்களில் ரூ. ஒருகோடியே 81 லட்சத்து 13ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநிமலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் தங்கம் 590 கிராம், வெள்ளி 9,030 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்-376, ரொக்கம் ரூ. ஒருகோடியே 81 லட்சத்து 13ஆயிரம் 268 கிடைத்துள்ளது. பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாத என வதந்தி பரவியதால், இம்முறை உண்டியலில் ஏராளமான நாணயங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !