திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பத்திரதீபம் கோலாகலம்
ADDED :3211 days ago
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் பத்திரதீப விழா கோலாகலமாக நடந்தது. திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் பத்திரதீப விழா கடந்த 25ம் தேதி துவங்கியது.
காலையில் மகா கணபதி ஹோமம் நடந்தது. மூன்று நாட்களும் சுவாமி வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் மற்றும் அபிசேக ஆராதனைகள் நடந்தன. திருமூலமகாலிங்கம், காந்திமதியம்மன் மூலவர் சன்னதிகளில்அபிசேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. 26ம் தேதி மாலையில் சுவாமி மணி மண்டபத்தில் தங்கவிளக்கு தீபம் ஏற்றப்பட்டது. நேற்று மாலையில் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, உள்பிரகாரங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு ரதவீதிகளிலும் உலா வந்தனர்.