கம்பத்தில் 30 அடி உயர விநாயகர் சிலை அமைப்பு
ADDED :3210 days ago
கம்பம்: கம்பத்தில் இருந்து கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களும், விவசாயிகளும் வாகனங்களில் சென்று வருகின்றனர். குமுளி மலைப்பாதையில் வழிவிடு முருகன் கோயில், வழிவிடு மாதா சர்ச் உள்ளது. அதேபோல கம்பமெட்டு மலைப்பாதையில் கோயில் கிடையாது. இதனிடையே கம்பமெட்டு அருகில் ஆமையாறு என்ற இடத்தில் ரோட்டின் ஓரத்தில் 30 அடி உயரத்தில் பிரமாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. மாலி பகுதியைச்சேர்ந்த விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கூறுகையில், “இவ்வழித்தடம் மூணாறு-தேக்கடி மார்க்கமாக இருப்பதால் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்கின்றன. அதில் செல்வோரும், இப்பகுதியில் உள்ளவர்களும் வணங்கிச்செல்ல இந்த பிரமாண்ட விநாயகர் சிலையை அமைத்து வருகிறோம். விரைவில் பணி முழுமையாக முடிந்து, மக்களின் வழிபாட்டிற்கு திறக்கப்படும்,என்றனர்.